Loading Now

சொரிவன சில (நிலைமண்டிலம்)

மலைகள் சொரிவன மல்லிகை நறுமணம்
அலைகள் சொரிவன ஆழிப்பெண் ஆழ்மனம்
சிலைகள் சொரிவன சிற்பியின் நுண்புலம்
கலைகள் சொரிவன காதலின் இலக்கணம்

பாலைகள் சொரிவன பகலவன் திறனே
சோலைகள் சொரிவன சுரும்பின இசையே
காலைகள் சொரிவன கவிதையின் தொடரே
மாலைகள் சொரிவன மங்கையர்ப் புலம்பே

வஞ்சினம் சொரிவன வழிவழி மறமே
அஞ்சனம் சொரிவன அங்கண் கலுழே
பஞ்சனை சொரிவன பலபல கனவே
நெஞ்சினுள் சொரிவன நேற்றைய நினைவே

மலர்கள் சொரிவன மகிழ்ச்சியின் ஊற்றே
அலர்கள் சொரிவன அவன்அவள் கூட்டே
வளங்கள் சொரிவன மருதத்துக் கூற்றே
நிலங்கள் சொரிவன நிலைத்திடும் தமிழே

•⁠ ⁠புவனா கருணாகரன்

Share this content:

Post Comment

You May Have Missed