தமிழுக்கு மாறலாம் வாங்க – 1
வார்த்தை என்பது வடமொழிக் கிளவி
சொல் என்பது வண்டமிழ்க் கிளவி
மௌனம் என்பது வடமொழிக் கிளவி
அமைதி என்பது வண்டமிழ்க் கிளவி
சூரியன் என்பது வடமொழிக் கிளவி
கதிரவன் என்பது வண்டமிழ்க் கிளவி
மேகம் என்பது வடமொழிக் கிளவி
முகில் என்பது வண்டமிழ்க் கிளவி
அமாவாசை என்பது வடமொழிக் கிளவி
காருவா என்பது வண்டமிழ்க் கிளவி
பௌர்ணமி என்பது வடமொழிக் கிளவி
வெள்ளுவா என்பது வண்டமிழ்க் கிளவி
சந்திரன் என்பது வடமொழிக் கிளவி
நிலவு என்பது வண்டமிழ்க் கிளவி
கிளவி என்றால் சொல், மொழி
நிலவு என்றால் உவா, நிலா
முகில் என்றால் எழிலி, கொண்மூ
கதிரவன் என்றால் எல்லோன், வெய்யோன்
• புவனா கருணாகரன்
Share this content:
Post Comment