கொஞ்சூண்டு தமிழ்ச்சோறு(தொல்காப்பியத் துளிகள் 1)நாளும் உண்போமா? வாரும்
சங்க இலக்கியத்தை முழுமையாக படித்துப் புரிய தொல்காப்பியக் கல்வி மிகவும் இன்றியமையாதது. சங்க இலக்கியத்தை மட்டுமல்ல அதற்குப் பின்வந்த இலக்கியங்களையும் தான்.
தொல்காப்பியம் நமக்குக் கிடைத்திருக்கும் முதல் இலக்கண நூல். இதன் வழி வந்தவையே பின்வந்த இலக்கண நூல்கள்.
“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப”
(பொருளதிகாரம், அகத்திணையியல் 1)
அதாவது சங்க இலக்கியத்தில் அகத்திணைகள் 7 ஆகும்
அவை
- கைக்கிளை
- முல்லை
- குறிஞ்சி
- பாலை
- மருதம்
- நெய்தல்
- பெருந்திணை
திணைகள் நிலங்கள் கொண்டு மட்டும் பிரிக்கப்படுவன அல்ல. அவை ஒழுக்கம் சார்ந்தவையும்.
புறத்திணைகள் 7 ஆகும்
அவை
- வெட்சி – வெட்சி தானே குறிஞ்சியது புறனே
- வஞ்சி – வஞ்சிதானே முல்லையது புறனே
- உழிஞை – உழிஞைதானே மருதத்துப் புறனே
- தும்பை – தும்பை தானே நெய்தலது புறனே
- வாகை – வாகை தானே பாலையது புறனே
- காஞ்சி – காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
- பாடாண் – பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
(தொல்காப்பியம், புறத்திணையியல் 56, 61, 64, 68, 72, 76, 79)
- புவனா கருணாகரன்
Share this content:
Post Comment